
செய்திகள்
அசுரன் பட பாணியில் மின்வேலி; மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
விளைநிலங்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் நவீன முறைக்கு மெல்ல மெல்ல திரும்புகின்றனர். அதிலும் பயிர்களுக்கு பூச்சி தொல்லைகள் இல்லாமல் இருப்பதற்காக செயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவு தெளிக்கப்பட்டு வருகின்றன.
பல இடங்களில் இயற்கைக்கு விவசாயிகள் திரும்பி உள்ளனர். அதனையும் காட்டிலும் பயிர்களை பன்றிகள் அங்குள்ள விலங்கினங்கள் சேதப்படுத்தாமல் இருக்க விளைநிலங்களை சுற்றிலும் மின் வேலி அமைத்து பாதுகாக்கின்றனர்.
இவை ஒரு சில நேரங்களில் உயிரிழப்பையும் ஏற்பட்டு வருகிறது. இந்த மின் வேலி முறையை அசுரன் படத்தில் தத்துவமாக காட்டியிருப்பார்கள். அந்த வரிசையில் தற்போது மின் வேலியில் மாட்டிக் கொண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ராஜபாளையம் பகுதியில் வாழை தோப்பில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சடகோபன் என்பவரின் மின் வேலியில் சிக்கி வன்னிப் போர் கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
