Connect with us

நெல் கொள்முதல் போலி ரசீது- கனிமொழி உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட்!!

paddytry

தமிழகம்

நெல் கொள்முதல் போலி ரசீது- கனிமொழி உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட்!!

தற்போதைய திமுக அரசு பல்வேறு விதமான திட்டங்களை அமல்படுத்திக் கொண்டு வருகிறது. அவற்றுள் நெல் கொள்கலன்கள் அமைப்பது பற்றி  சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மேலும் இதன்மூலம் மழை நேரங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தது.

கடந்த ஆட்சியை போல் இல்லாமல் டெண்டர் முறை நேரடியாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது நெல் கொள்முதல் தொடர்பாக போலி ரசீது வழங்கிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் செய்யாமல் போலி ரசீது மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த 10 ஆம் தேதி துணை மண்டல மேலாளர் விஜயகுமார் கண்காணிப்பாளர்கள் சுரேஷ்பாபு மற்றும் கனிமொழி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வந்த மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 2020 ஆம் ஆண்டு முறைகேடு நடத்திருப்பதாக கிடைத்த புகார்களின் அடிப்படையில் மூன்று பேரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.

இதுவரை வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் நெல் கொள்முதல் மோசடி தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top