Connect with us

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு மேலும் மூன்று வாரம் அவகாசம்!!

Jayalalitha

தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு மேலும் மூன்று வாரம் அவகாசம்!!

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதற்கு முன்பு வரை அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரின் மரணம் குறித்து தற்போது வரை விசாரணை நடைபெற்று கொண்டு வருகிறது. இவரின் மரணத்தைப் பற்றி விசாரிப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் சசிகலாவுக்கும் ஜெயலலிதா மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.

இது சசிகலாவின் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அளித்தது. இந்த நிலையில் இன்றுடன் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நிறைவு பெற இருந்தது; ஆனால் மூன்று வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் மூன்று வாரம் அவகாசம் அளித்தது தமிழக அரசு. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 14வது முறையாக கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top