சனி, ஞாயிறு, திங்கள்.. 3 நாட்கள் நடந்த ஐபிஎல் போட்டியில் வெற்றியை நிர்ணயம் செய்த 7 ரன்கள்..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் அணிகள் வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இதுவரை 34 போட்டிகள் முடிவடைந்துள்ளன என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளின் ரன்களின் வித்தியாசம் ஏழு ரன்கள் என்பது ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

srh vs dc1ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியில் குஜராத் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியிலும் பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடந்த மூன்று போட்டிகளில் வெற்றியை நிர்ணயம் செய்வது 7 ரன்கள் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த 21ஆம் தேதி நடந்த சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 7 என்பது வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு எண்ணாக இருந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...