Connect with us

அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்: அதிர்ந்தது அந்தமான தீவுகள்

News

அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்: அதிர்ந்தது அந்தமான தீவுகள்

05371a1f3f6bb8cd10e860625f07c5a2

அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அந்தமான் பகுதியில் அதிர்ந்ததாகவும் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 7:21 முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சுமார் 2 மணி நேரங்களில் அதாவது 9.12 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை அடுத்து ஒரு நிமிடம் கழித்து மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலநடுக்கம் கிட்டத்தட்ட 6 ரிக்டர் அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு சில மணி நேரங்களில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தற்போது காத்திருக்கின்றனர்

மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top