மூணு நாள் வசூல் இவ்வளவா?… பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றே நாட்களில் 200 கோடி வசூலித்திருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

கல்கியின் வரலாற்று சிறப்பு வாய்ந்த பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், குந்தவியாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, வந்தியத் தேவனாக கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு வேற லெவலுக்கு இருந்த நிலையில், முன்பதிவு வரலாற்றுச் சாதனைகளை படைத்தது. இந்நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் சுமார் 200 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.