Connect with us

ஒவைசி கட்சிக்கு மூன்று தொகுதிகள்: டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு!

News

ஒவைசி கட்சிக்கு மூன்று தொகுதிகள்: டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு!

54c2578d171b29713fc157fe5fb6af4c

சமீபத்தில் நடந்த பீகார் மாநில பொதுத்தேர்தலில் ஒவைசி கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளை வென்றது என்பதும் காங்கிரஸ் கூட்டணி வாக்குகளை அந்த கட்சி பிரித்ததால் தான் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் ஓவைசி கட்சி காலூன்றி உள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் அந்த கட்சி கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளை பெற்றுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் ஓவைசி கட்சி போட்டியிடும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:

d46e0c1474267791611cfa6bbc517fcd

ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் ஒவைசி அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் ஏ-இந்திஹாதுல் முஸ்லிமின் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது 

அம்மா முன்னேற்ற கழகத்திற்கு, அகில இந்திய மஜ்லிஸ் ஏ-இந்திஹாதுல் முஸ்லிமின்  கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அம்மா முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய மஜ்லிஸ் ஏ-இந்திஹாதுல் முஸ்லிமின் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஒவைசி கட்சியால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top