Connect with us

அச்சுறுத்தும் நோரோ வைரஸ்: 5 சிறுவர்கள் பாதிப்பு !!

Florona virus started following Omigran virus

News

அச்சுறுத்தும் நோரோ வைரஸ்: 5 சிறுவர்கள் பாதிப்பு !!

உலகில் புதியதாக பலவகை வைரஸ்கள் பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா என்னும் வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வந்த நிலையில் அது மாற்றமடைந்து ஒமைக்ரானாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் நோரோ என்ற புதிய வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞம் என்ற பகுதியில் 5 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்க் கூறியுள்ளார். கேரளாவில் கடந்த ஒரு மாத காலமாக வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருகிறது. இந்த சூழலில் தற்போது புதிதாக மேலும் ஒரு வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்த நோரோ வைரஸ் பாதிப்பு அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், அடி வயிற்றில் வீக்கம், வாந்தி மயக்கம், தலைவலி போன்றவைகள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துவதால் வைரஸ் பரவுவதாக தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வைரஸ்ஸால் 5 மாணவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top