Connect with us

மின் பற்றாக்குறை அச்சுறுத்தல்-ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

ops

தமிழகம்

மின் பற்றாக்குறை அச்சுறுத்தல்-ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

நேற்றைய தினம் மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கவும் விற்கவும் தடை விதித்துள்ளது.

மேலும் இந்த மாநிலங்களில் மின்சார வர்த்தகத்திற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி கூறியுள்ளார்.

அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசுக்கு வலியுறுத்தியது தெரியவந்துள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துமாறு அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தி கூறியுள்ளார். ஏற்கனவே நம் தமிழகத்தில் வர இருக்கின்ற நாட்களில் மின்சார கட்டணம் உயரும் என்று மின்வாரியத்துறை அமைச்சர் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top