தொட்டதையெல்லாம் துலங்க செய்யும் துர்க்கை அம்மனின் 108 துதி

துர்க்கை வழிபாடு அளப்பறிய நன்மைகளை தரக்கூடியது. நம்பினோரை இவள் கைவிட்டதில்லை… செவ்வாய், வெள்ளிக்க்கிழமைகளைல் துர்கை வழிபட்டு வந்தால் நற்பலன் பெறலாம். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி துர்கை வழிபடுவதால் ராகு-கேது தோசம் நீங்கும். திருமணம், பிள்ளை வரம் கிட்டும், எதிரிகள் தொல்லை அகலும்.

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!

ஓம் அஷ்டமி நாயகியே போற்றி!

ஓம் அபயம் தருபவளே போற்றி!

ஓம் அசுரரை வென்றவளே போற்றி!

ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி!

ஓம் அமரரைக் காப்பவளே போற்றி!

ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி!

ஓம் அருள்நிறை அன்னையே போற்றி!

ஓம் அருளைப் பொழிபவளே போற்றி!

ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி!

ஓம் ஆலால சுந்தரியே போற்றி!

ஓம் ஆதியின் பாதியே போற்றி!

ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி!

ஓம் இணையில்லா நாயகியே போற்றி!

ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி!

ஓம் இடபத்தோன் துணையே போற்றி!

ஓம் ஈர மனத்தினளே போற்றி!

ஓம் ஈடிணையற்றவளே போற்றி!

ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி!

ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி!

ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி!

ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி!

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!

ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி!

ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி!

ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி!

ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி!

ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி!

ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி!

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!

ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி!

ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி!

ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி!

ஓம் காளியே நீலியே போற்றி!

ஓம் காபாலியை மணந்தவளே போற்றி!

ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி!

ஓம் கிரிராஜன் மகளே போற்றி!

ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி!

ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி!

ஓம் குறுநகை கொண்டவளே போற்றி!

ஓம் குங்கும நாயகியே போற்றி!

ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி!

ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி!

ஓம் கோள்களை வென்றவளே போற்றி!

ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி!

ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி!

ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி!

ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி!

ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி!

ஓம் சங்கரன் துணைவியே போற்றி!

ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி!

ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி!

ஓம் சிங்கார வல்லியே போற்றி!

ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி!

ஓம் சியாமள நிறத்தாளே போற்றி!

ஓம் சித்தி அளிப்பவளே போற்றி!

ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி!

ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி!

ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி!

ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி!

ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி!

ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி!

ஓம் தயாபரியே தாயே போற்றி!

ஓம் திருவெலாம் தருவாய் போற்றி!

ஓம் திரிபுர சுந்தரியே போற்றி!

ஓம் தீமையை அழிப்பாய் போற்றி!

ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி!

ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி!

ஓம் நன்மை அருள்பவளே போற்றி!

ஓம் நவசக்தி நாயகியே போற்றி!

ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி!

ஓம் நிமலையே விமலையே போற்றி!

ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி!

ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி!

ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி!

ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி!

ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி!

ஓம் பயிரவியே தாயே போற்றி!

ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி!

ஓம் பயங்கரி சங்கரியே போற்றி!

ஓம் பார்வதிதேவியே போற்றி!

ஓம் புவனம் படைத்தவளே போற்றி!

ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி!

ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி!

ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி!

ஓம் மங்கல நாயகியே போற்றி!

ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி!

ஓம் மங்கையர்க்கரசியே போற்றி!

ஓம் மகமாயித் தாயே போற்றி!

ஓம் மாதர் தலைவியே போற்றி!

ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி!

ஓம் மாணிக்கவல்லியே போற்றி!

ஓம் மாயோன் தங்கையே போற்றி!

ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி!

ஓம் முக்தியளிப்பவளே போற்றி!

ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி!

ஓம் மூலப்பரம்பொருளே போற்றி!

ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி!

ஓம் யசோதை புத்திரியே போற்றி!

ஓம் யமபயம் போக்குபவளே போற்றி!

ஓம் ராகுகால துர்க்கையே போற்றி!

ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி!

ஓம் வல்லமை மிக்கவளே போற்றி!

ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி!

ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி!

ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி!

ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி!

ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி!

துர்க்கையை எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் நன்மை கிட்டும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.