வீடு கட்ட நினைப்பவர்களா? இதோ உங்களுக்கான பட்ஜெட்! 2023 ஆம் ஆண்டுக்குள் 18 லட்சம் வீடுகள்…..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணி தல் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டு வருகிறார். இதில் ஏராளமான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இயற்கை விவசாயம், 400 புதிய ரயில்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீடு கட்ட நினைப்போருக்கு ஒரு அசத்தலான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வீடு கட்ட ரூபாய் 40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் .
அதன்படி பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். நாடு முழுவதும் 2023 ஆம் ஆண்டுக்குள் 18 லட்சம் வீடுகள் குறைந்த விலையில் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 48,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்களின் தரத்தை மேலும் உயர்த்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது எல்லையோர கிராமங்கள் திறன்மிக்க கிராமங்களாக நவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
