Connect with us

கூட்டணியை மீறி வென்றவர்கள் ராஜினாமா செய்திட வேண்டும்! கூட்டணி அறத்தை காப்பாரா முதல்வர்?

தொல் திருமாவளவன்

Tamil Nadu

கூட்டணியை மீறி வென்றவர்கள் ராஜினாமா செய்திட வேண்டும்! கூட்டணி அறத்தை காப்பாரா முதல்வர்?

கூட்டணியை மீறி வென்றவர்கள் ராஜினாமா செய்திட வேண்டும்! கூட்டணி அறத்தை காப்பாரா முதல்வர்?

இன்றைய நாள் திமுக கூட்டணி எனக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ள நாளாக காணப்படுகிறது, ஏனென்றால் இன்று தமிழகமெங்கும் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றையதினம் திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால் இன்றோ திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் கூட்டணி கட்சிக்கு எதிராக போட்டியிடவிட்டாலும் திமுக கவுன்சிலர்கள் கூட்டணி கட்சி வேட்பாளராக மறைமுக தேர்தலில் களமிறங்கினர்.

பல இடங்களில் அதிருப்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மிகுந்த சோகத்தில் திமுக கூட்டணி கட்சியினர் உள்ளனர். இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அவர் டிஆர் பாலுவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூட்டணியை மீறி வென்றவர்கள் ராஜினாமா செய்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற திமுகவினரை ராஜினாமா செய்ய வைத்து விட வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். கூட்டணிக் கட்சியினரை எதிர்த்து போட்டியிட்டவரை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அரசை முதல்வர் காத்திட வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவிக்கான போட்டியில் விசிக அதிகாரபூர்வ வேட்பாளர் வெறும் மூன்று வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top