தடுப்பூசி செலுத்தாதவர்கள் 18 பொது இடங்களுக்கு செல்ல தடை!: கிருஷ்ணகிரி கலெக்டர் உத்தரவு!!

நம் இந்தியாவில் தினந்தோறும் பல லட்சக் கணக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் 128 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இரண்டாவது தவணை தடுப்பூசி  பெரும்பாலான மக்கள் இன்னும் செலுத்தவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கும் தகவலக காணப்படுகிறது.

தடுப்பூசி

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை நம் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளார்.

ஏனென்றால் நம் இந்தியாவில் தற்போது  ஒமைக்ரான் கொரோனா அச்சம் அதிகமாக நிலவுகிறது. ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 18 இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை வரும் அபராதமும் விதிக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி  செலுத்தி இருந்தவர்கள் அதற்கான குறுஞ்செய்தியிணை காட்ட வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment