தடுப்பூசி போடாதவர்கள் தயவுசெய்து வெளியே வராதீர்கள்! உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!!

இந்தியாவின் பெருமுயற்சியால் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது.

தடுப்பூசி

இதனால் பொதுமக்கள் வெளியே செல்வது கூட தயங்கும் நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இத்தகைய வீரியமிக்க நோயை இந்தியா துடிப்போடு செயல்பட்டு கட்டுப்படுத்தியது. அதற்கு பெரும் உதவியாய் காணப்பட்டது தடுப்பூசி ஆகும்.

இந்தியாவில் இதுவரை 120 கோடிக்கும் அதிகமான கொரோனா  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் இரண்டாம் தவணை தடுப்பூசி மிகக் குறைந்தளவிலேயே செலுத்தப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் பலரும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க ஒவ்வொரு மாநில அரசும் முன்வந்து திட்டங்களை அறிவித்து வருகின்றன. அப்போது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நம் தமிழகத்தில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு வெளியே செல்ல தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியேறவும், பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும், கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது அவதூறு நடவடிக்கை ஏற்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment