ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!

சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 27,000 பிரதிநிதிகள் ஊரக உள்ளாட்சி பதவியை இன்று ஏற்க உள்ளனர்

மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகள் ஆட்சியர் அலுவலகங்களில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வரும் 22 ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வெற்றி பெற்ற உறுப்பினர்களும் இன்று பதவி ஏற்க உள்ளனர் என்பதும் அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print