மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 25 மேற்பட்ட விவசாயி அமைப்பினர் கைது!!!

நம் இந்தியாவில் உள்ள விவசாயிகள் பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.விவசாயி

இந்த நிலையில் நம் தமிழகத்திலும் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட இந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது. ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனென்றால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரிக்கவும் முற்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 25க்கு மேற்பட்ட விவசாய அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் 3 வேளாண் திட்டங்களை திரும்பப் பெறவும்,உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதை எதிர்த்தும் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மையை விவசாயிகள்  எரிக்க முயன்றபோது அதனை பாஜகவினர் தடுக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பை உருவாகியது.இறுதியில் விவசாய அமைப்பினர் 25 மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment