Connect with us

அதிகாலையே கடலுக்கு புறப்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்!!

மீனவர்

தமிழகம்

அதிகாலையே கடலுக்கு புறப்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்!!

சுமார் 60 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர். காரணம் அங்கு மீன்பிடி தடைக்காலம் விதிக்கபட்டிருந்தது. ஏனென்றால் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும் மீன் குஞ்சுகள் அதிக அளவு உற்பத்தியாவதற்கும் மீன்பிடி தடைக்காலம் விதிக்கபட்டிருந்தது.

இந்த தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 8000 மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளதாக தகவல் கிடைத்திருந்தது.

ஆயினும் குமரி மக்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மத்தியில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை 60 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.

மீன்பிடி துறைமுகங்கள் ஆழப்படுத்தும் பணி நடப்பதாலும் 140 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top