Connect with us

‘அந்த குழந்தைகளை அடிச்சி தூக்கி தொங்கவிடனும்’… கொலைவெறி ஆசாமியை வச்சி செய்த காவல்துறை!

fecca496 8582 4434 b58d 5b858bee1042

News

‘அந்த குழந்தைகளை அடிச்சி தூக்கி தொங்கவிடனும்’… கொலைவெறி ஆசாமியை வச்சி செய்த காவல்துறை!

‘அந்த குழந்தைகளை அடிச்சி தூக்கி தொங்கவிடனும்’… கொலைவெறி ஆசாமியை வச்சி செய்த காவல்துறை!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் தந்தை பெரியாரின் பெண்ணிய கொள்கைகள் குறித்து சிறுமி, சிறுவர்கள் நடித்துகாட்டினர். தந்தை பெரியார் வேடமணிந்து சிறுவன் அற்புதமாக நடித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டுக்களை குவித்தது.

இந்நிலையில், இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நபர், தந்தை பெரியார் வேடமணிந்து நடித்த குழந்தைகளை அடித்து கொன்று, பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும்” என கொலைமிரட்டல் விடுக்கும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர் ஸ்கிரின் ஷார்ட் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, அந்த நபரை கைது செய்ய வேண்டுமென புகார்கள் எழுந்தது. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் கயத்தாறு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பீதி ஏற்படுத்துதல், சட்ட ஒழுங்கை சீர் குலைத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் குமார் பாபு, கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top