News
தூத்துக்குடி மாவட்டம்! கோவில்பட்டியில் பணம் பறிமுதல்!
தேர்தல் சமயம் நெருங்கிய நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் பரபரப்பான நிலையில் நிகழ்கிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தல் அதிகாரி, தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
மேலும் அவர்கள் 240 திமுக தொப்பிகளையும் கைப்பற்றினர். மேலும் அவர்கள் விசாரித்தற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் தொகையையும் ,தொப்பியையும் கைப்பற்றினர்.
