Connect with us

எல்லை தாண்டி மீன் பிடிப்பது அறியாத செயல்; படகுகள் ஏலத்திற்கு தொண்டமான் எதிர்ப்பு!

thondaman 1

News

எல்லை தாண்டி மீன் பிடிப்பது அறியாத செயல்; படகுகள் ஏலத்திற்கு தொண்டமான் எதிர்ப்பு!

எல்லை தாண்டி மீன் பிடிப்பது அறியாத செயல்; படகுகள் ஏலத்திற்கு தொண்டமான் எதிர்ப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியான தகவல் தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 105 தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விட உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் மீனவர் படகுகள் ஏலம் விடுவதற்கு தொண்டமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்களின் படகை ஏலம் விடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று செந்தில் தொண்டமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கடற்தொழில் அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வரும் 7ஆம் தேதி தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை கடற் தொழில் அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டுவது அறியாத செயல்; மீன் பிடிக்கும் நோக்கில் மட்டுமே கடலுக்கு வருகின்றனர் என்றும் தொண்டமான் கூறினார். அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தொண்டமான் கூறினார்.

தமிழக மீனவர்களின் படகுகள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் இரு தரப்பு மீனவர்கள் இடையே நல்லுறவு வலுப்படும் தொண்டமான் கூறினார். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் செந்தில் தொண்டமான் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top