அரசு அறிவித்த ஜாக்பாட் அறிவிப்பு: விருது தொகை உயர்வு; இந்த ஆண்டு 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்!

நாளைய தினம் நம் தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் நெருங்கி விட்டாலே நம் தமிழகத்தில் விருதுகள் அளிக்கும் விழாவும் நெருங்கி விடும். அந்த வரிசையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு விருதுத் தொகையை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசின் விருது தொகை ரூபாய் ஒரு லட்சத்தில் இருந்து ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விருது தொகையுடன் சேர்த்து தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இரண்டு பேருக்கும் திருவள்ளுவர் தினமான சனிக்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்க உள்ளார்.

3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல், தீயணைப்புத் துறையில் பணியாற்றும் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் நிலை 1, தலைமை காவலர், ஹவில்தார், சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3,000 பேருக்கு பதக்கம் வழங்க உள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

தீயணைப்பு துறையில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் 60 பேருக்கும் பதக்கம் வழங்க உத்தரவிட்டுள்ளார். பதக்கங்கள் பெறுபவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மாதாந்திரப் அதிகப்படியாக ரூபாய் 400 வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

காவல் வானொலி பிரிவில் 6 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு அரும் பாடுபட்டு வருபவர் நீதிபதி சந்துரு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment