கடந்தாண்டை விட இந்தாண்டு பட்ஜெட் சிறப்பு! ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு!!

கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால் பெரும்பாலான டெல்டா மாவட்டங்களில் பயிர், விளை நிலங்கள் சேதமடைந்தது. இருப்பினும் அவர்களுக்கு நிவாரணத் தொகையை அறிவிக்கப்பட்டது.

ஆனால் நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறிவந்தனர். அந்தவகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கூறியுள்ளார்.

அதன்படி மழை வெள்ள பாதிப்பு களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கபடும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். வேளான் கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்த 40 திட்டங்களில் 26 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று அன்புமணி கூறினார். இந்த ஆண்டு நெல் கொள்முதலை 60 லட்சம் டன் ஆக உயர்த்தும் வகையில் பட்ஜெட் உள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அனைத்து மாவட்டங்களிலும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூபாய் 500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment