Connect with us

இவ்வாண்டுக்கான “கி ராவிருது” இந்த பிரபல எழுத்தாளருக்கு கிடைத்துள்ளது!

News

இவ்வாண்டுக்கான “கி ராவிருது” இந்த பிரபல எழுத்தாளருக்கு கிடைத்துள்ளது!

0a2b0055b1b0a588af95e0b61ec992d4

முன்னொரு காலத்தில் தமிழகத்தில் எழுத்தாளர்கள் பலரும் மிகவும் அங்கீகரிக்கப்பட்டு காணப்பட்டனர். மேலும் அவர்கள் எழுதிய நாவல்கள் புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அடைந்தது. மேலும் அவர்கள் புகழ் எங்கும் பரவியது ஆனால் காலம் செல்ல செல்ல நவீன வளர்ச்சி காரணமாக புத்தகங்களின் உற்பத்தியானது குறைந்து கொண்டே வந்தது. அதைவிட வேதனை என்னவென்றால் எழுத்தாளர் களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.23b4ab537995e2b44be0e1216530b399

நம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர் ஒருவருக்கு  கி ரா விருது வழங்கப்படும். அதன்படி பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி ரா விருது வழங்கப்படுகிறது. மேலும் பிரபல கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருதில் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறந்த படைப்பாளர் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கி ரா விருதுக்கான பரிசுத் தொகை 5 லட்சத்தை சக்தி மசாலா நிறுவனம் வழங்கி வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் கோணங்கிக்கு இந்த விருது வழங்கப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top