இந்தாண்டு மொத்தம் 119 பத்ம விருதுகள்! இதில் பி.வி. சிந்துவுக்கு பத்ம பூஷண் விருது!!

சினிமா, விளையாட்டு,அரசியல், அறிவியல் இப்படி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசானது விருது வழங்கி கவுரவிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய உயரிய விருதாக கருதப்படுவது பாரதரத்னா விருது.

ராம்நாத் கோவிந்த்

பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக காணப்படுவது பத்ம விருதுகள். இந்த நிலையில் தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார்.

அதன்படி டெல்லியில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கி வருகிறார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் ஏழு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படுகிறது. 10 பத்மபூஷன் விருதுகள் கொடுக்கப்படுகிறது.102 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 119 பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

பி.வி. சிந்து

இதில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு பத்மபூஷன் விருது வழங்கினார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஸ்மா சுவராஜ்-கான பத்ம விபூஷன் விருதை அவரது மகள் பன்சுரி பெற்றுக் கொண்டார்.இது போன்று பல துறைகளிலும் சிறந்து விளங்கி அவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கொண்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment