இந்த ஆண்டு வெயில் எப்படி இருக்கும்?

இந்த வருடத்தின்  குளிர்காலம் முடிந்து வெயில்காலம் துவங்க உள்ள காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.  இதுவரை கடும் பனிப்பொழிவு வாட்டி எடுத்த இடங்களில் எல்லாம் பனிப்பொழிவு குறையத்தொடங்கி உள்ளது.

இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த ஆண்டைப் பொறுத்த வரையில் மழைப்பொழிவு குறைவாகவே காணப்பட்டது.

சமீபத்தில் வெளியான தமிழக வானிலை மைய  அறிவிப்பில் இனி வரும் காலங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இப்போதிலிருந்தே தயாராகுங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment