இந்த ஆண்டு விவோ ஐபிஎல் கிடையாது! புதிய டைட்டில் ஸ்பான்சர் யார் தெரியுமா?

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று கேட்டால் பலரும் கூறுவது இந்தியன் பிரீமியர் லீக் தான். இந்த நிலையில் கடந்த ஆண்டு சாம்பியனாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இது நான்கு முறை சாம்பியன் பட்டத்தை சூடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மொத்தம் 8 அணிகள் இருந்தன.

அதேவேளையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கான நிகழ்ச்சியில் புதிதாக இரண்டு அணிகள் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக லக்னோ மற்றும் அகமதாபாத் என்ற இரண்டு அணிகள் 2022ஆம் ஆண்டு களமிறங்க உள்ளன.

இந்த சூழலில் ஐபிஎல் என்றாலே முதலில் செய்து ஸ்பான்சராக பெப்சி இருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த கம்பெனிகள் தொடர்ச்சியாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வரை விவோ தான் ஐபிஎல் ஸ்பான்சராக காணப்பட்டது.

ஆனால் புதிதாக மற்றொரு பிரபல நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான ஸ்பான்சர்ஷிப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபிஎல் டி20 போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதிலாக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2023 வரை டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ இருந்தநிலையில் டாடாவுக்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment