இந்த வருஷம் ஆல் பாஸ் கிடையாது! மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தான் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்பின்னர் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறை

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் தேர்வு இன்றி ஆல் பாஸ் முறையில் தேர்ச்சி பெற்றார்கள்.பொதுவாக தமிழகத்தில் பொதுத்தேர்வு என்பது மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு ஆகிவிடும்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் நிலவி வந்ததால் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை. இருப்பினும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதத்தில் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. பள்ளி பொதுதேர்வில் தற்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி மார்ச் ஏப்ரல் மாதங்களில் பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment