
Tamil Nadu
இந்தாண்டு 9494 ஆசிரியர்கள் பணி நியமனம்!! நீட்தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் குரல்!!
தமிழகத்தில் அனைவரும் ஒன்றாக எதிர்ப்பது நீட் தேர்வுக்கு எதிராகத்தான். நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப் படிப்பின் கனவுக்கு தடையாக காணப்படுகிறது. இதற்கெதிராக தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் அனைத்தும் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீட் சட்டப் போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். நேற்றைய தினம் ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வினை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான முதலமைச்சரின் குரல் நியாயமான குரல் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டி அளித்தார். பல சட்ட போராட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றது போல் நீட் சட்ட போராட்டத்திலும் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.
அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இந்த ஆண்டு 9494 ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
