காலேஜ் மாணவர்களுக்கான தித்திப்பான தகவல்! இந்த ஆண்டும் ஆன்லைனில் தான் செமஸ்டர் தேர்வு!!

நம் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் கல்லூரிகளில் வந்து எழுதுமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இருந்து வகுப்புகள் மட்டும் ஆன்லைனில் எடுக்கப்படுகிறது. தேர்வுகள் நேரடி முறையா? என்று கோஷமிட்டு முழக்கமிட்டனர்.

பொன்முடி

அதன் பின்னர் கொரோனாவின் காரணமாக தற்போது வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் இருக்குமோ? என்று ஏங்கிய மாணவர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தித்திப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 1ம் தேதி தொடங்கி பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் ஆன்லைன் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள் ஆசிரியர் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். கொரோனாவின் காரணமாக தற்போதைய சூழலில் நேரடி தேர்வுகள் நடத்த இயலாத நிலை உள்ளது என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதனால் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்பது தெளிவாகிவிட்டது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி,கலைக் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான முறையிலேயே ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். இறுதித்தேர்வு நேரடியாக மட்டுமே நடத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கமளித்தார்.

எந்தவித முறைகேடுகளும் இடமளிக்காத வகையில் ஆன்லைன் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். ஒரு செமஸ்டர் தேர்வில் 4 தாங்கள் எழுத வேண்டியிருந்தால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனுப்பலாம் என்றும் அவர் கூறினார். கல்லூரி முதல்வர், கல்வியாளர்கள் கலந்து ஆலோசித்து பாடத் திட்டங்களில் மாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கமளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment