இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் யார் யார்? வெளியேறுபவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை நாமினேஷன் பிராசஸ் நடைபெறும் என்றாலும் அதில் ஒரு போட்டியாளர் இரண்டு பேர்களை நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 16 போட்டியாளர்களும் இந்த வீட்டில் இருந்து வெளியே இருப்பவராக இருக்க வேண்டும் என்பது குறித்த நாமினேசன் தாக்கல் செய்தனர்

அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பின்வருமாறு: அபிஷேக், பாவனி ரெட்டி, அக்சரா, இசைவாணி, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, ப்ரியங்கா, அபினய், ஐக்கி, தாமரை.

இந்த 10 போட்டியாளர்களில் ஒருவர் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதும் ஆனால் அதே நேரத்தில் நாமினேஷனில் சிக்கியுள்ள 10 போட்டியாளர்களில் ஒருவர் இன்று விடுவிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இன்று பிக்பாஸ் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க்கை அறிவித்திருக்கிறார்கள். இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று, நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment