Connect with us

கிளம்பினார் எடப்பாடி; இந்த முறை காலதாமதம் இருக்காது!-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு;

palaniswai

தமிழகம்

கிளம்பினார் எடப்பாடி; இந்த முறை காலதாமதம் இருக்காது!-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு;

சென்னை வானரகத்தில் பத்து நாட்களுக்கு முன்பு அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மண்டபத்தை சுற்றி முழக்கமிட்டு வந்தனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்திற்கு சற்று தாமதமாகவே வந்தார். இதுவே அவரின் பேரில் குறையாக காணப்பட்டது. இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் விரைவில் வீட்டை விட்டு கிளம்பி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அதிமுக பொது குழுவில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து வானரகம் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழுவுக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துக் கொண்டு வருகின்றனர்.

கடந்த முறை பொதுக்குழுவுக்கு காரில் வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்த முறையோ பிரச்சார வாகனத்தில் செல்கிறார்.

கடந்த முறை ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார வாகனத்தில் சென்ற நிலையில் இந்த முறை எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் பயணத்தை தொடங்கியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top