இந்த முறையும் பெங்களூருக்கு ஐபிஎல் கப் கனவுதான்? வச்சி செஞ்சிட்டது சிஎஸ்கே….!!!

தற்போது இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் இன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்த்து போட்டி இடுகிறது.

இந்த போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 216 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை பெங்களூர் அணிக்கு கொடுத்தது,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகபட்ச பார்க்க சிவம் துபே 94 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்போடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது.

களம் இறங்கிய உடனேயே தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.

இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது 5வது போட்டியில் தான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்று முன்னேறி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.