Connect with us

இந்த பக்கம் அனி; அந்தப் பக்கம் தளபதி! ஒரே ஜாலியோ ஜிம்கானா தான் போல!!

jolly gymkhaana

Entertainment

இந்த பக்கம் அனி; அந்தப் பக்கம் தளபதி! ஒரே ஜாலியோ ஜிம்கானா தான் போல!!

இந்த பக்கம் அனி; அந்தப் பக்கம் தளபதி! ஒரே ஜாலியோ ஜிம்கானா தான் போல!!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கே.ஜி. எஃப் 2 திரைப்படத்தோடு நேரடியாக மோதுகிறது. இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படத்தினை பிரபல இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

இதில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி அரபிக் கூத்து என்ற பாடல் வெளியாகி இணையத்தில் இன்று வரையிலும் பல்வேறு சாதனைகளை புரிந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் 19ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடலும் அதிகளவில் பார்வையாளர்களை பெற்று கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலின் படப்பிடிப்பு தள போட்டோவை திரைப்பட கதாநாயகி பூஜா தனது twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அவர் நடிகர் விஜய் மற்றும் அனிருத்தின் கையோடு கோர்த்து நிற்கிறார். இயக்குனர் நெல்சன் உள்ளார். இவர்கள் நால்வரும் இருக்கும் செம லுக்கில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top