வீட்டை சுத்தப்படுத்தவும் துணி துவைக்கவும் ரோபோட்.. இன்னும் என்னென்ன வரப்போகுதோ..!

உலகில் டெக்னாலஜி அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு வசதிகளை மனிதன் பெற்று வருகிறான் என்பதும் மனிதனின் உழைப்பு தற்போது மிகவும் சுருங்கி இயந்திரங்கள் அதிக அளவில் பணி செய்யும் நிலை வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே மனிதன் செய்யும் பல வேலைகளை ரோபோட் செய்ய தொடங்கியுள்ள நிலையில் தற்போது வீட்டை சுத்தப்படுத்துவது மற்றும் துணி துவைப்பது ஆகிய பணியையும் ரோபோட் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ்டன் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய ரோபோவை உருவாக்கி உள்ளனர். TidyBot என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் வீட்டை தினசரி சுத்தம் செய்வதற்கு ஏற்றது என்றும் தரையிலிருந்து பொருட்களை திறம்பட எடுத்து குறிப்பிட்ட இடங்களில் ஒரு சில கட்டளைகளின் அடிப்படையில் அந்த பொருள் சார்ந்த இடங்களில் அந்த ரோபோவால் வைக்க முடியும் என்று ஆய்வுக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

robot1

இந்த ரோபோட்டுக்கு சில கட்டளைகளை கொண்ட சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அந்த ரோபோட் தனது பணியை திறமையாக செய்து முடிக்கும் என்றும் கூறப்படுகிறது. எந்தெந்த கலர் சட்ட்சையை எந்தெந்த அலமாரியில் வைக்க வேண்டும்? எந்த பொருளை எந்த இடத்தில் வைக்க வேண்டும் போன்ற கட்டளைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

வெள்ளை நிற ஆடைகள், கலர் நிற ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை அலமாரியில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? உள்பட அனைத்து அம்சங்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரோபோட் எந்தெந்த இடத்தில் எந்தெந்த பொருள் வைக்க வேண்டும் என்பதை ஒருமுறை செட் செய்து விட்டால் மென்பொருளில் அதை மனப்பாடம் செய்யப்படும் என்றும் அதன் பிறகு நீங்கள் எந்தவிதமான கட்டளையும் செய்யாமல் அந்த இடத்துக்கு பொருள்கள் ரோபோவால் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் எந்தெந்த துணிகள் பயன்படுத்தப்பட்டவை என்பதை அறிந்து அதை எடுத்து வாஷிங்மெஷினில் போட்டு துவைக்கும் பணியையும் இந்த ரோபோ செய்து விடும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த ரோபோ 91% துல்லியமாக கட்டளைகளை பின்பற்றி எதிர்பார்த்தபடி பணிகளை செய்து முடித்ததாகவும் விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews