இனி இந்த போன் ரஷ்யாவில் கிடைக்காது…!!! ஏற்றுமதியை ஸ்டாப் பண்ணிய முன்னணி நிறுவனம்;
ரஷ்யாவுக்கு ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு தடைகளை விதித்து கொண்டு வருகிறது. ஏனென்றால் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு கொண்டு வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
நாடுகள் மட்டுமின்றி பல நிறுவனங்களும் ரசியாவில் பல்வேறு விதிமுறைகளை கொண்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக டிஸ்னி மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் படங்களை வெளியிடுவதில்லை என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பிரபல முன்னணி மொபைல் நிறுவனமான சாம்சங் ரஷ்யாவுக்கு ஏற்றுமதியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கு செல்போன்கள், உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. தென் கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரஷ்யாவுக்கு செல்போன் உதிரிபாக ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனமும் ரஷ்யாவில் தமது விற்பனை மற்றும் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியில் பல்வேறு பின்னடைவு கடந்த சில நாட்களாகவே நிகழ்ந்து கொண்டு வருகிறது என்பது தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது.
