Tamil Nadu
ஏடிஎம் மிஷினில் கார்டை செருகும் முன் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!
ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் அட்டையைப் செருகும் முன்பாக கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் முறைகேடுகளில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட குறிப்புகளில் ஒன்றுதான் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி ஏடிஎம் கார்டை செருகுவதற்கு முன் கேன்சல் என்ற பட்டனை இரண்டு முறை அழுத்த வேண்டும். உங்களுக்கு முன்னதாக ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி உங்கள் ஏடிஎம் பின் நம்பரை திருடுவதற்கு ஏதாவது முயற்சி செய்திருந்தால் அந்த முயற்சியை கேன்சல் பட்டனை இருமுறை அழுத்துவதன் மூலம் முறியடிக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கேன்சல் பட்டனை இருமுறை அழுத்துவதன் மூலம் உங்களது பின் நம்பர் திருடு போகாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒவ்வொரு முறை ஏடிஎம் மிஷினில் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவதற்கு முன்பாக இரண்டு முறை கேன்சல் பட்டனை அழுத்துவதை பழக்கமாக்கிக் கொண்டால் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து முறைகேடுகள் செய்வது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
