News
சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான வரி விலக்கில் இதுவும் இடம் பெறலாம்..
ஜூலை 5 ம் தேதி மோடி அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டில் வருமான வரி ரீதியில் அதிக அளவில் விலக்குகள் அளிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
1) அதிக வருமான வரி விலக்கு வரம்பு:
தனிநபர்களுக்கான வரி விலக்கு வரம்பை அவர்களின் வருடாந்திர வருமானத்தில் தற்போதைய ₹ 2.5 லட்சத்திலிருந்து 7.5 லட்சமாக உயர்த்தலாம்.
கிளியர்டாக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்க்கிட் குப்தா, விலக்கு வரம்பு 7.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

2014 ஆம் ஆண்டில், மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி லோக் சபா தேர்தலில் வென்ற உடனேயே, அருண் ஜெட்லி தனது முதல் மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2) உயர் பிரிவு 80 சி விலக்கு வரம்பு:
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ் செய்யப்படும் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்தவும் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. தற்போதைய வரம்பு ₹ 1.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி (Section 80C) மூலம் அளிக்கப்படும் வரி விலக்குக்கான வரம்பு 3 லட்சம் ரூபாய் உயர்த்தப்படும் எனக் கருதப்படுகிறது.
டெலோயிட் ஹாஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் எல்.எல்.பியின் இயக்குனர் நிதின் பைஜால் கூறுகையில், பணவீக்கம் மற்றும் விலை உயர்ந்த மருத்துவ செலவுகள் காரணமாக, பாலிசி நிறுவனங்கள் பிரிவு 80 டி இன் கீழ் ₹ 25,000 முதல் 35,000 வரை விலக்கு கொடுப்பதற்கு பரிசீலிக்கலாம், இதன் மூலம் மருத்துவத்தின் மலிவுத் தன்மையினால் அனைத்து வகுப்பினைச் சார்ந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியும்.
