புன்னகை மன்னன் படத்தில இந்த முத்தக் காட்சி எனக்கே தெரியாம தான் எடுத்தாங்க… ரேகா பகிர்வு…

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ரேகா. இவரின் இயற்பெயர் ஜோஸ்பின் ஆகும். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன், சத்யராஜ், ராமராஜன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ரேகா.

1986 ஆம் ஆண்டு ‘கடலோர கவிதைகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே ஆண்டு கமலஹாசன் அவர்களுக்கு ஜோடியாக ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன் (1987), அருள் தரும் அய்யப்பன் (1987), செண்பகமே செண்பகமே (1988), என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988), ராசாவே உன்னை நம்பி (1988), என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் (1989), தங்கமான புருஷன் (1989), புரியாத புதிர் (1990), பாட்டுக்கு நான் அடிமை (1990), குணா (1991), வைதேகி கல்யாணம் (1991), திருமதி பழனிச்சாமி (1992), போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் ரேகா.

பின்னர் 2000 களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரேகா. விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 கிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக் கொண்டு பிரபலமானவர்.

தற்போது முதலாவதாக நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட ரேகா, புன்னகை மன்னன் திரைப்படத்தில் மலையிலிருந்து சாகுறதுக்கு கீழே விழும் காட்சியை படமாக்க நானும் கமலும் நின்றிருந்தோம். அப்போது ஷாட் ரெடி கண்ணை மூடிட்டு சாக போற மாதிரி நடின்னு சொல்லிட்டாங்க. நான் கண்ணை மூடினதும் கமல் கிஸ் பண்ணிட்டாரு அந்த சீன் படி. அப்போ முத்தக் காட்சியும் படமாக்க போறாங்க அப்படினு எனக்கு தெரியாது. ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும், இந்த சீன் படமாக்க போறோம்னு என்கிட்ட சொல்ல மாட்டாங்க, ஏன்னா நான் அப்போ அவ்ளோ பெரிய நடிகை இல்லை. அதனால புன்னகை மன்னன் படத்துல வர அந்த முத்தக் காட்சி எனக்கே தெரியாம எடுத்தது தான் என்று பகிர்ந்துள்ளார் ரேகா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...