
பொழுதுபோக்கு
அட டே! யாஷிகாவா இது.. மார்டன் உடையில் கலக்குறாங்க…
தமிழ் சினிமாவில் ’கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா அனந்த். பின்னர் இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் உருவான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகவும் ஈர்க்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாம்பி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதே சூழலில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கிய யாஷிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி படுகாயமடைந்தார்.
இதனிடையே சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதோடு சோசியல் மீடியாவில் அவர் போடும் கவர்ச்சிப் புகைப்படங்களால் நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளார்.
அதே சமயம் தனது நேரங்களை ரசிகர்களுக்கு ஒதுக்கும் போதும் பல ரசிகர்கள் ஏடாகூடமாக கேட்கும் கேள்விக்கு அசால்டாக பதில் கூறும் விதம் பலபேர் பாராட்டப்பட்டுகின்றனர்.
இந்த சூழலில் சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் வைரலாகிவிடும். அந்த வகையில் கருப்பு நிற உடையில் மொத்த அழகையும் காட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
