Connect with us

இதனால் தான் எங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம்…. மனம் திறந்த விக்னேஷ் சிவன்….!

விக்னேஷ் சிவன்

பொழுதுபோக்கு

இதனால் தான் எங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம்…. மனம் திறந்த விக்னேஷ் சிவன்….!

இதனால் தான் எங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம்…. மனம் திறந்த விக்னேஷ் சிவன்….!

நட்சத்திர தம்பதிகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது கோலிவுட்டில் காதல் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள்.

nayan vicky

கோலிவுட் முழுவதும் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இருவருமே அவர்களின் பணியில் பிசியாக இருப்பதால் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே சென்று வருகிறார்கள். இருப்பினும் அனைத்து விழாக்கள் மற்றும் பிறந்தநாள் போன்றவற்றை இருவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் உங்கள் திருமணம் எப்போது என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய இயக்குனர் விக்னேஷ் சிவனிடமும் இதே கேள்வியை தான் ரசிகர்கள் எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், “எங்களின் காதல் வாழ்க்கை தற்போது நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. இதைத் தவிர எங்களுக்கு தனித்தனி குறிக்கோள் இருப்பதால் அதை நாங்கள் வெகு விரைவில் அடைந்துவிட்டு திருமணத்திற்கு தயாராவோம்.

மேலும் செலிபிரிட்டிகளின் திருமணங்கள் என்றாலே அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னரும் கொரோனா தொற்று குறைந்த பின்னரும் திருமணம் செய்து கொள்வோம்” என கூறியுள்ளார். இவர் கூறுவதை பார்த்தால் ஊரடங்கு முடிந்த பின்னர் இந்தாண்டே கூட இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top