Connect with us

ஓ…,, இதற்குத்தான் பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறாரா?

modi

Tamil Nadu

ஓ…,, இதற்குத்தான் பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறாரா?

பல மாதங்களுக்குப் பின்பு இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை புரிகிறார். இதனால் பிரதமரை வரவேற்க சென்னையில் ஏற்பாடுகள் அதிதீவிரமாக காணப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் சென்னை உள்விளையாட்டு அரங்கத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. அவரை வரவேற்கும் விதமாக பரதநாட்டியம் உள்ளிட்ட தமிழகத்தின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் பிரதமர் மோடி சென்னைக்கு வந்து பின்பு இரவு 07:30 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்ப உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பொது மக்கள் குவிந்துள்ளனர்.

ரூபாய் 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்னை வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முன்கூட்டியே ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.

மேலும் அவர் தொடங்கி வைக்கும் திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் கிடைத்துள்ளது. அதன்படி ரூபாய் 31 ஆயிரத்து 400 கோடியில் 11 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மதுரை முதல் தேனி இடையிலான ரயில் பாதை, தாம்பரம் டு செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மேலும் ரூபாய் 116 கோடியில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகளை பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்குகிறார். திருவள்ளூர் தொடங்கி பெரும் பெங்களூரு இடையே குழாய் மூலமாக எரிவாயு விநியோக திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top