Connect with us

இதனால் தான் தனுஷ் என்னை அந்த சீனில் நடிக்க வைத்தார்…. சீக்ரெட் சொன்ன டிடி….!

dd 1

பொழுதுபோக்கு

இதனால் தான் தனுஷ் என்னை அந்த சீனில் நடிக்க வைத்தார்…. சீக்ரெட் சொன்ன டிடி….!

இதனால் தான் தனுஷ் என்னை அந்த சீனில் நடிக்க வைத்தார்…. சீக்ரெட் சொன்ன டிடி….!

பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பார்கள். என்னதான் இவர் தொகுப்பாளினியாக இருந்தாலும் ஒரு சில படங்களில் சிறிய கேரக்டரில் தலைகாட்டி உள்ளார். அந்த வகையில் இவர் சிறிய கேரக்டரில் நடித்த படம் தான் பவர் பாண்டி.

dd

கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகர் ராஜ்கிரண், ரேவதி மற்றும் பிரசன்னா, தனுஷ் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் பவர் பாண்டி. இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகை ரேவதியின் மகளாக தொகுப்பாளினி டிடி ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அந்த காட்சியில் ஏன் நடித்தேன் என்பது குறித்து டிடி கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ஒரு நாள் தனுஷ் எனக்கு போன் பண்ணி நான் இயக்குற படத்துல ஒரு ரோல் பண்ணனும்ன்னு கேட்டாரு. தனுஷ் மாதிரி ஒருத்தர் வந்து கேட்கும்போது யாராவது இல்லன்னு சொல்லுவாங்களா?

நானும் சரி சார் பண்லாம்ன்னு சொல்லிட்டேன். ஒரே ஒரு சீன்தான்னு சொன்னார், நானும் சந்தோஷமா, ஒரே ஒரு சீன் தான பண்ணிடலாம்னு ஓகே சொல்லிட்டேன். லேடீஸ்க்கு மெசேஜ் சொல்லணும், ஸோ அவங்களுக்கு நெருக்கமா இருக்குற, எல்லாருக்கும் புடிச்ச ஒரு முகமா இருந்தா நல்லா கனெக்ட் ஆகும் அதனால தான் என்ன கேட்டதா சொன்னார்.

அவர் சொன்ன அந்த வார்த்தைக்காக தான் நான் அந்த படத்துல நடிச்சேன்” என கூறியுள்ளார். டிடி தொகுப்பாளினியா இருந்தாலும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்காமல் தவிர்த்து வந்தார். இதுபோன்ற சில வாய்ப்புகளை மட்டும் ஏற்று நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top