இந்தியாவிலேயே இங்குதான் பிச்சைக்காரர்கள் அதிகம்: வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட் !!
நாட்டிலேயே அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிச்சைகாரர்கள் அதிகம் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
பிச்சைகாரர்கள் மறுவாழ்வு தொடர்பான கேள்வி ஒன்றிற்கு மாநிலங்கள் அவையில் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் நாராயண சாமி நாட்டிலேயே மேற்குவங்காளத்தில் அதிக பட்சமாக 81,24 நபர்கள் பிச்சை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதில் 19 வயதுக்குட்பட்ட பிச்சைகாரர்கள் மட்டும் 4,323 நபர்கள் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 65, 835 நபர்கள் பிச்சை எடுப்பதாகவும், இதில் 14,509 நபர்கள் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று கூறினார்.
அதே போல ஆந்திராவில் 30, 218 பேரும், பீகாரில் 29,723 பிச்சைகாரர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து தமிழகத்தில் 6,814 நபர்கள் இருப்பதாகவும் 782 நபர்கள் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என கூறியுள்ளார்.
மேலும்., நாடு முழுவதும் சுமார் 4,13,670 பிச்சை காரர்கள் உள்ளதாக ஒன்றிய அரசு புள்ளி விவரம் தெரிவிப்பதாக ஒன்றிய அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளார்.
