Connect with us

எனக்கு பட வாய்ப்பு இல்லாம போனா நான் இதை தான் செய்வேன்…. தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக்….!

tapsee 1

பொழுதுபோக்கு

எனக்கு பட வாய்ப்பு இல்லாம போனா நான் இதை தான் செய்வேன்…. தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக்….!

எனக்கு பட வாய்ப்பு இல்லாம போனா நான் இதை தான் செய்வேன்…. தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக்….!

கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை டாப்ஸி. இவர் அறிமுகமான ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த டாப்ஸி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இவர் இறுதியாக ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் பாலிவுட்டில் டாப்ஸி இப்படி சாதாரண நாயகி கிடையாது. தப்பட், ராஷ்மி ராக்கெட், ஹசன் தில்ருபா என சோலோ நாயகி படங்களில் தான் தற்போது டாப்ஸி பெரும்பாலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை கதையான சபாஷ் மிது படத்தில் சோலோ ஹீரோயினாக டாப்ஸி நடித்து வருகிறார்.

இதுதவிர மேலும் 3 பாலிவுட் படங்களிலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களிலும் டாப்ஸி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி பேசியிருப்பதாவது, “முன்பெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்தேன். இப்போது தேர்வு செய்து நடிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன்.

எனது படங்களை மக்கள் ஏற்று கொள்வதால் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.இனி நான் சினிமாவைத் தேடி ஓடப்போவதில்லை. ஒருவேளை படங்கள் இல்லை என்றால் நல்ல தயாரிப்பாளர்களை தேடி நான் ஓடுவேன். எனக்காக இந்த வேலையை யாரும் செய்ய மாட்டார்கள். நான் சுதந்திரமாக இருப்பதால் எனக்கான வேலையை நானே செய்து கொள்வேன்” என கூறியிருக்கிறார்.

டாப்ஸி படங்களில் நடிப்பதில் எந்த அளவிற்கு ஆர்வமாக உள்ளாரோ அதே அளவிற்கு படங்களை இயக்குவதிலும் ஆர்வமாக உள்ளார். ஒருவேளை பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற படங்களை இயக்குவேன் என்பதை தான் டாப்ஸி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top