என்னால இதுதான் முடியும்… தாடி பாலாஜி பகிர்வு…

தாடி பாலாஜி தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் நடிகர் ஆவார். தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர் தாடி பாலாஜி. சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் தோன்றுபவர்.

1997 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் மற்றும் சுஹாசினி நடித்த ‘நந்தினி’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார் தாடி பாலாஜி.

சன் டிவியின் பிரபலமான தொடரான ‘மாயா மச்சீந்திரா’ தொடரில் எம். எஸ். பாஸ்கருடன் இணைந்து நகைச்சுவை கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானார் தாடி பாலாஜி. வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் தாடி பாலாஜி.

விஜய் டிவியின் கலக்க போவது யாரு, அது இது எது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார் தடி பாலாஜி. இது தவிர பிக் பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக கலந்துக் கொண்டு புகழடைந்தார். நித்யா என்ற பெண்ணை மணந்து பிரச்சனைகளால் சர்ச்சைக்கு உள்ளானவர். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

தற்போது, தாடி பாலாஜி அவர்கள் KPY பாலாவை போலவே வெளியே காட்டிக் கொள்ளாமல் பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில், அரசு பள்ளிகளுக்கு சென்று உதவிகளை செய்து வருகிறார். இதைப் பற்றி கூறுகையில், நான் அரசு பள்ளியில் படித்த மாணவன் தான், பெரிய அளவில் இல்லாவிட்டாலும் என்னால் முடிந்தவற்றை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் தாடி பாலாஜி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews