இந்த ஆண்டின் மூன்றாவது முழு ஊரடங்கு-மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அமல்!

கடந்த இரண்டு வாரங்களாக நம் தமிழ்நாட்டில் ஞாயிறு விடுமுறை தினத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. போன வாரம் ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கலாக இருந்தாலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமையும் தமிழ்நாட்டில் ஒரு நாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுவதும் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஊரடங்கு காலத்திலும் பால், மருந்து வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு கூறியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் வரவிருக்கின்ற முழு ஊரடங்கு காலத்திலும் தொடரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இருப்பினும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கமான ஆட்டோக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் வெளியூர் பயணிகளின் நலன் கருதி செயலிகள் மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்களும் அனுமதி என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மாவட்ட ரயில் நிலையங்களிலும், வெளியூர் பேருந்து நிலையங்களிலும் ஆட்டோ டாக்சி சேவைக்கு அனுமதி அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment