பாஜகவின் வெற்றிக்கு காரணம் இதுதானா? பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் இவரே முதலமைச்சர்!!
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் புதிதாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையை நிரூபித்து உள்ளது.
இங்கு பாஜகவின் சார்பில் யார் முதல்வராக இருப்பார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வாகியுள்ளார். உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக மீண்டும் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேராடூனில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக தேர்வானார். உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையிலும் இஸ் கர்சிங் தாமே மீண்டும் முதல்வராக தேர்வாகியுள்ளார்.
