தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் வருகை குறைந்ததற்கு காரணம் இதுதான்… ஹிப் ஹாப் தமிழா ஆதி பகிர்வு…

2011 ஆம் ஆண்டு வெளியான ‘கிளப்புல மப்புல’ பாடலின் மூலம் பிரபலமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. 2012 ஆம் ஆண்டு ‘ஹிப் ஹாப் தமிழன்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இது இந்தியாவிலேயே முதல் தமிழ் ஹிப் ஹாப் ஆல்பம் என்ற பெருமையைப் பெற்றது.

ஆதி, ஜீவா ஆகிய இரண்டு பேரும் இணைந்து தான் ஹிப் ஹாப் தமிழா ஆல்பத்தை உருவாக்கினர். ஜீவா வெளியுலகில் தன்னைக் காட்டிக் கொள்ள கூச்சப்பட்டதால், ஆதி அவர்களே அணைத்து பிரஸ் மீட்களில் கலந்துக் கொள்வார். அதனால் ஹிப் ஹாப் தமிழா என்ற பெயரே ஆதி அவர்களுக்கு அடையாளமாக ஆனது.

சுப்பிரமணிய பாரதியின் வடிவம் ஹிப் ஹாப் தமிழாவிற்கு லோகோவாக இருப்பது கூடுதல் பிளஸ் ஆக அமைந்தது. முதலில் சினிமாவில் பாடல்களை பாடினார் ஆதி. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்த ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலைப் பாடி பாடகராக அறிமுகமானார்.

பின்னர் விஷால் நடித்த ‘ஆம்பள’ திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி. இப்படத்தில் மூன்று பாடல்களையும் பாடியுள்ளார் ஆதி. நடிப்பதற்கு வாய்ப்பு வந்தும் அதில் ஆர்வம் இல்லை என்று நிராகரித்து வந்தார்.

பின்பு 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை (2019), நான் சிரித்தால் (2020), சிவகுமாரின் சபதம் (2021), அன்பறிவு (2022), வீரன் (2023) போன்ற திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் அதி நடித்த PT சார் திரைப்படம் வெளியாகி உள்ளது.

அதற்கான பத்திரிகை சந்திப்பில் பேசிய ஆதி, தியேட்டரில் படம் பார்க்க விரும்பும் மக்களின் வருகை தற்போது குறைந்துள்ளது. அதற்கான காரணமாக நான் நினைப்பது, வெளியாகும் படம் ஓடிடி க்கு வந்துவிடும், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...