அதிசயக் கிணறு நிரம்பாததற்குக் காரணம் இதான்.. ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டத்தின் அருகே உள்ள ஆயன்குடியில் உள்ள கிராமத்தில் அதிசய கிணறு ஒன்று உள்ளது நாம் அறிந்ததே. கிணறுல அப்படி என்ன ஸ்பெஷல் அப்டின்னு கேக்காதீங்க. அந்தக் கிணற்றில் எவ்வளவு தண்ணீரைவிட்டு நிரப்பினாலும் நிரம்பவே மாட்டிக்கிதுங்க அது அதிசயம் தானே.

இந்த செய்தி இணையத்தில் வைரலானதையடுத்து அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் அந்தக் கிணறைச் சென்று பார்வையிட்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் சென்று இந்தக் கிணறைப் பார்வையிட்டனர். மேலும் விநாடிக்கு 2000 லிட்டர் வீதம் தண்ணீரையும் செலுத்திப் பார்த்தனர்.

மேலும் டிசம்பர் மாதம் பெய்த கடுமழையின்போதும் இந்தக் கிணறு நிரையாத நிலையில் சிறுகுளம் நிரம்பிப் போனது.

அதனையடுத்து சிறுகுளத்தின் நீரும் இந்தக் கிணறுக்கு அனுப்பபட்டது.

இந்த அதிசய கிணறு குறித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் அடித்த நிலையில் ஐஐடி மாணவர்கள் இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி ஆராய்ச்சி முடிவில் இந்த அதிசயக் கிணறு அதிக அளவில் நீர் கடத்தும் திறன் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.