Entertainment
ஃபாத்திமா பாபு வெளியேறியதற்கு இதுதான் காரணம்…
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஒரு வாரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த வாரம் எலிமினேஷன் நடந்தது. இவர்களைத் தொடர்ந்து எலிமினேஷன் பட்டியலில் மதுமிதா 6 வாக்குகளும், மீரா மிதுன் 8 வாக்குகளும், சாக்ஷி 2, கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 2 வாக்குகள் மற்றும் ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
மக்களின் ஆதரவைப் பொறுத்துப் பார்க்கையில், மதுமிதாவிற்கு தான் மக்களின் ஆதரவு அதிகளவில் இருந்துள்ளது. இதனால் இவர் பாதுகாக்கப்பட்டுள்ளார்.

கவின், மீரா மிதுன், சரவணன், சேரன், சாக்ஷி பாதுகாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து எலிமினேஷன் பட்டியலில் எஞ்சியிருந்தது ஃபாத்திமா தான்.
ஆனால் மதுமிதா, கவினுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றிருந்தவர் ஃபாத்திமா தான். சாக்ஷி அல்லது மீரா மிதுன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபாத்திமா வெளியேறியத் பலருக்கு அதிர்ச்சி என்றாலும், மக்கள் கூறுவது யாதெனில், “ ஃபாத்திமா அவர்கள் கனிவான குணத்துடன் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர், தன்னைப் பற்றிப் பேசுவோரைப் பற்றிப் புறணி கூட பேசாதவர், துயரப்படுவோருக்கு ஆறுதலாக இருப்பவர்”, அதனால் அவர் இந்த சதி நிறைந்த கும்பலோடு இருக்க வேண்டாம் என்பதே எங்கள் கருத்து என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
